வலி
வரிகளுக்கு வலிகள் தெரிவதில்லை …
அது என்னுடைய வரிகள் என்பதால் ….
மருந்து
உன்னை மறந்த பின்பு தான் நான் உண்ணும் மருந்துகள் யாவும் கசக்கின்றன …
.
.
உன்னை மறந்த பின்பு தான் மருந்துகளும் தேவைப்படுகின்றன …
பெண்
கருவாகி உருவானேன் பெண்ணாலே ….
ஆணாகி ஆளானேன் பெண்ணாலே ….
உன்னாலே என் வாழ்கை முன்னாலே ….
ஆணாக பிறந்ததால் ருசித்தேன் தாய்ப்பால் …
பெண்ணாகத்தான் பிறந்திருந்தால் ருசித்துருப்பேன் கொலை கள்ளியின் கள்ளிப்பாலை ….
மிதி மறந்து … மதிப்போம் பெண்ணை ….
காமம் மறந்து காப்போம் பெண்ணை ….
நிர்வாணம் வேண்டாம் .. புதுவானம் படைப்போம் பெண்ணால் ….
கண்ணீர்
நீர் என்பதால் ஆனது கண்ணீர் …
வலி என்பதால் ஆனது கண்ணீர் …
உணர்வுகள் என்பதால் ஆனது கண்ணீர் …
உணர்ச்சிகள் என்பதால் ஆனது கண்ணீர் …
கண்ணீர் வேண்டும் நம்மில்.. ஆனந்தமாய்..
This information is priceless. When can I find out more?
I think the admin of this site is genuinely working hard in support of his site,
for the reason that here every information is quality based material.